Search This Blog

Friday, December 3, 2010

என்னை விளக்கும் விசும்பே போற்றி !

விரிவான் வெளியே விந்தையின் விளக்கே
 இரா.திருமாவளவன்










என்னை விளக்கும் விசும்பே போற்றி !
திரிந்து இருந்து சிதைவுறும் பொருளே
சிதைந்து ஒடுங்கிச் சீர்பெறும் உருவே
புதைந்து புதைந்து உட்கரு வாகி
வினையில் விளங்கி உயிர்ப்பொரு ளாகி
முனைந்து முனைந்து அறிவின் விளைவாய்
நுண்ணிய அணுவாய் அணுப்பே ரண்டமாய்
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
திருவாய் மனத்துள் இயங்குபே ரொளியே
என்னை இயக்கி என்னுள் இயங்கி
என்னை விளக்கும் விசும்பே போற்றி !

No comments:

Post a Comment